*****
அன்றொருநாள் ;
பசுமையான மலரும் நினைவுகள் ;
'' கண்ணில் தூசு விழுந்துவிட்டது,
கொஞ்சம் ஊதி எடுங்கள் '' என்கிறாய்.
நல்ல உதவி.............நான் மறுப்பேனா ?
'' நீங்கள் ஊதுகிறீர்களா ? உறிஞ்சுகிறீர்களா ?
இது உதடு அல்ல கண் '' என்கிறாய்.
நான் சிரித்துக்கொண்டே,எனக்கு இப்படியெல்லாம்
வித்தியாசம் பார்க்கத் தெரியாது என்கிறேன்.
'' உங்கள் உதட்டில் தூசு ஒட்டிக்
கொண்டிருக்கிறதே '' என்று தொடர்கிறாய்.
'' அதை விட்டுவிடு, அது என்னுள்ளே போகட்டும்,
உன் கண்ணின் செய்தியைத் தூதாக
இருந்து சொல்லட்டும்'' என்கிறேன்.....