Saturday, October 29, 2011

தொலைந்துபோகிறாள்.........


******************

நான் எழுதும் எழுத்துக்கள் அழகாக
இருக்கிறதெனப் பலர் கூறி என்ன பயன்.....
எனக்கென்று எழதப்பட்ட எழுத்துக்கள்
தலைகீழாக உள்ளதே.....

எல்லோருடனும் சகஜமாக
நகர்ந்து செல்லும் உன் சொற்கள்,
என்னை மட்டும் ஏனோ வேவு பார்க்கின்றன....
அளவோடு பேசிவந்த என்னை
அளவின்றிப் பேச வைக்கிறாய்.

என் உள் மனதின் உளறல்கள்
உயிர் தொலைத்த உணர்ச்சிகளாய்
வந்து விழுகின்றன என் காகிதத்தில்.
அந்த உணர்ச்சிகளைப் படித்த
உன் மௌன உதடு கூட
என் எழுத்துக்கள் சாதாரணமாகத் தான்
உள்ளதென கொக்கரிக்கின்றது.

உண்மைதான் , உன் கையெழுத்துக்கருகில்
என் வரிகள் சாதாரணமானவை தான்.
மேல் கிளையிலே நாகம்,
கீழே வேங்கை,
நடுக் கிளையிலே தொங்கிக்
கொண்டிருக்கிறது உனக்கான என் நம்பிக்கை.

வாசல் பெருக்கிச் சாணம் தெளிக்கும்
ஒரு குடும்ப மங்கையாக என்னுள்
புகுந்தவள் இன்று என்மீது கொண்ட
அவநம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைந்துகொண்டிருக்கிறாள் அவளையே அறியாமல்.

No comments:

Post a Comment