Sunday, October 30, 2011

மறந்தேனும் தொலைத்துவிடாதே !...............

**************************

உன் நாணத்தின் திரைச்சீலையை
சீர்செய்து என் எண்ணங்களைப் பரிமாறத் திரும்பினால் ,

உன் விழியோரப் பார்வையில் என் மோகத்தின்
சிறகுகள் முளைத்து எழுகின்றன !

நமக்கான சில்மிசச் சிந்தனையின் சன்னலைச் சாத்துகையில் ,
உனது ஏக்கத்தின் முந்தானை சரிந்து விழுவதைக் கண்டேன் !

ஓரமாக நெளியும் உன் இதழ்களில் நான் சொல்ல வந்த
எண்ணங்களும் தடம் மாறி விழுகின்றன !

தலையணைக்குள் ஒளித்துவைத்த உன் புன்னகைகள் எங்கே !

மறந்தேனும் தொலைத்துவிடாதே !

காரணம் ;

கொடியில் காய்ந்துகொண்டிருக்கும்
என் ஆடையில் தான் ஒட்டிக் கொண்டு
கிடக்குது உன் மல்லிகை இதழ்களின் வேட்கை !..........

No comments:

Post a Comment