Saturday, October 29, 2011

என்னை விட்டுப் போகிறாயா ?....................

***********************
ஓர் அந்தியில் பழக்கமான
அந்தப் பசும்புல் தரையில்
அமர்ந்தவாறு நாம்
கண்களினாலே மொழியைக்
கௌரவப்படுத்திக் கொண்டிருக்கிறோம்....,
நீ அருகில் வருகிறாய் ,
உன் பக்கம் அமரத் துடிக்கிறேன்,
உன் இரு கரங்களையும் வாரி அணைக்கிறேன்....

அப்போது கதவை யாரோ தட்டும் ஒலி கேட்கிறது...,
என் கனவு கலைந்துவிடுமென்ற பயத்தில்
நான் கதவைத் திறக்கவில்லை....,
சில நேரத்தின் பின் அந்த
சத்தம் இல்லாமல் போகிறது......

யார் தான் என்று ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்....,
தூரத்தில் போய்க்கொண்டிருக்கிறது ஒரு உருவம்,
அது உண்ணுருவமாக இருக்கக் கண்டு அதிர்ச்சியடைகிறேன்....

கனவில் வந்த நீ,
உன் கனவு கலைந்ததால்
போய்க்கொண்டிருக்கிறாயா.........,

அல்லது ;
நான் கனவில் மூழ்கியிருக்கிறேன் என்று
நனவில் வந்த நீ திரும்பிப் போகிறாயா,
கனவிலும் நிஜத்திலும் என்னை விட்டுப் போகிறாயா ?....................

1 comment:

  1. இது தான் விதியின் விளையாட்டோ?

    ReplyDelete