Saturday, October 29, 2011

அன்றொரு நாள் !

******
அன்றொரு நாள் !

ஒரு நள்ளிரவில் !

அந்த நந்தவனத்தில் இருக்கிறேன் !

ஊமை இருட்டின் மௌன அழகை

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ......,

என் ஏகாந்தத்தைக் கலைக்கும் வண்ணம் நீ ஓடி வருகிறாய்.....,

காரணம் புரியாத காரிருள் என் மேல் படிகிறது...........


'' இந்த நேரத்தில் இப்படி வரலாமா ? " என்கிறேன்.....,

" ஏன் பதறுகிறீர்கள் ? ஊர் வாய்க்குப் பயப்படுகிறீர்களா ! " என்கிறாய் !

" ஊர் வாய்க்கு மட்டுமல்ல நம்மையும் மீறி இந்த உடல்

பசி கொள்ளத் தொடங்கினால் என்ன செய்வது " என்கிறேன்......


" நீங்கள் உடலைப் பற்றியே நினைக்கிறீர்கள்.......,

நானோ என் ஆன்மாவை உங்கள் திருவடிகளில்

சமர்ப்பிக்க ஓடி வந்திருக்கிறேன் " என்கிறாய்......,

நீ என் பார்வையில் இமயமலையாய் உயர்ந்து நிற்கிறாய் !

என் குற்றமுள்ள நெஞ்சத்தின் சார்பாக நான் தலை குனிகிறேன்......

2 comments:

  1. அருமை நண்பரே ..அழகிய கவிதை ..
    வலை தள வடிவமும் மிக அழகு நண்பரே ..

    என்றும்
    பிரியமுடன்
    விஷ்ணு ,....


    நீ மட்டும் நிஜமானால் .. நான் என்றும் நிழலாவேன் !

    என் எழுத்தோவியங்கள் : www.vishnukavithai.blogspot.com
    என் கவிதை : www.vishnu-vichu.blogspot.com
    என் கடிதம் : www.vichuvichu.blogspot.com
    என் காதல் : www.vichu-vishnu.blogspot.com
    என் வருத்தம் : www.enathu-ennangal.blogspot.com

    ReplyDelete